கோவை சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று (13.01.2026) கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் கல்லூரி தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். மேலும், கல்லூரி செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன் இயக்குநர் சேகர் மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவ மாணவியரின் பொங்கல் நடனங்கள், நடனம்,பறையாட்டம்,கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலப்போட்டி,பொங்கல் வைக்கும் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.