கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய வயது வரம்பற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திரா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி அபார வெற்றி பெற்றது.
அரசூரில் உள்ள மேக்னஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீ ஜெயேந்திரா அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் எடுத்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியின் பந்துவீச்சாளர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பந்துவீசினர். குறிப்பாக சச்சின் சிறப்பாகச் செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக நிகில், தருண் ஆதித்யா தலா 2 விக்கெட்டுகளையும், இசட். ஹாலித் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியதன் மூலம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

