தமிழ்நாடு மாநில குருதிமாற்றுக் குழுமம் மற்றும் கோவை மாவட்ட அரசு ரத்த மையங்கள் சார்பில், “தேசிய தன்னார்வ ரத்ததான தினம் 2025” முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவையில் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக ரத்ததான முகாம்கள் நடத்தி, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்த தானம் வழங்கிய அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் தளபதி ரத்ததான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கண்காணிப்பாளர் வாசுதேவன் வழங்கினார்.

