டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறையின் சார்பாக “செலஸ்டியல் 2025” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ‘தேவதைகள் மற்றும் சூனியக்காரிகள்’ என்ற தலைப்பில் வெவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வந்து ஓய்யாரமாக நடந்தனர்.

ngp 2 4

நிகழ்வை என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மதுரா பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆடை அணிவகுப்புப் போட்டியின் நடுவர்களாக திருப்பூரைச் சேர்ந்த ஹார்ஸ் பாஷனின் மேலாண்மை இயக்குநர் நரசிம்மன், ஒப்பனைக் கலைஞர் தரணி ஜெகதீஷ் மற்றும் நடிகர் ஸ்ரீநிகேதன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ngp 10 scaled