எல்சி மருத்துவ அறக்கட்டளை, பல்சமய நல்லுறவு இயக்கத்துடன் இணைந்து இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை, வயிறு மற்றும் மகளிர் நலம் முகாமை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) அன்று ரத்னபுரியில் உள்ள லாலா மஹாலில் நடத்துகிறது.

டாக்டர் ராஜன் தலைமையிலான 30 பேர் கொண்ட மருத்துவக் குழு பொதுமக்களுக்கு இலவச எண்டோஸ்கோபி மற்றும் ஆலோசனையை வழங்க உள்ளனர். இதில் அனைத்து வகையான இரைப்பை மற்றும் மகளிர் நோய் பிரச்சினைகளுக்கும் இலவச ஆலோசனை அளிக்கப்படும்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிறுவனர் முகமது ரபிக் முகாமை ஒருங்கிணைக்கிறார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் நிகழ்விற்கு தலைமை தாங்குகின்றனர்.