கங்கா மருத்துவமனை மற்றும்முதுகு தண்டுவட சிகிச்சை மறுவாழ்வு மையம் சார்பில் 6வது ஆண்டாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வீல்ஸ் மாரத்தான் கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. சிற்றுளி அறக்கட்டளையுடன் இணைந்து இதனை நடத்தியது.

இதில் பொதுமக்கள் 850 பேர், சக்கர நாற்காலியை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் 150 பேர் என மொத்தம் 1000 பேர் கலந்து கொண்டனர்.

சிஆர்ஐ பம்ப்ஸ் தலைவர் சௌந்தரராஜன், கங்கா மருத்துவமனையின் இயக்குனர் ராஜசேகரன், சிற்றுளி அறக்கட்டளை நிர்வாகி குணா, சொர்க்க அறக்கட்டளை நிர்வாகி குரு பிரசாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.