நிர்மலா மகளிர் கல்லூரியில் கணித மேதை ராமானுஜரை நினைவு கூறும் வகையில், இளைய தலைமுறையினரிடையே கணித ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். கணித மாதிரி உருவாக்கம், வினாடி வினா, நடனம், தமிழ் மற்றும் ஆங்கில சொற்பொழிவு போட்டிகளில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
லைசா சொல்யூஷன்ஸ் முதன்மை செயல் அதிகாரி லவ்லின் ரோஸ் நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரிபெபியோலா, புல முதன்மையர் ஜூலியா ரோஸ்மேரி மற்றும் கணிதத்துறை தலைவர் சகாய சுதா ஆகியோர் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினர்.

ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை பிரின்ட் சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வென்றது. முதல் ரன்னரப் இடத்தை பிஎஸ்ஜி பப்ளிக் பள்ளியும், இரண்டாவது ரன்னர் இடத்தை ஸ்டேன்ஸ் பள்ளியும் பிடித்தன.

