கோவை கங்கா மருத்துவமனையின் 11வது ஆண்டு நிறுவனா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கரா கண் மருத்துவமனையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் ரமணி தலைமை வகித்தார்.

GANGA

சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும், வழக்குகளை விரைந்து முடிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.

 

GANGA 4

நிகழ்ச்சியில், மருத்துவமனையின் தலைவா் கனகவல்லி சண்முகநாதன், இயக்குநா்கள் டாக்டா் ராஜசபாபதி, டாக்டா் ராஜசேகரன், நிா்வாகிகள் ரமா, நிா்மலா, சிந்து, ராஜா சண்முக கிருஷ்ணன், பாரதிய வித்யா பவன் தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், லட்சுமி மெஷின்ஸ் தலைவா் சஞ்சய் ஜெயவா்த்தனவேலு, பண்ணாரி அம்மன் குழும தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், முன்னாள் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

GANGA 3