கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் பகுதிகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

4 17

இதன் திறப்பு விழா மற்றும் ஏற்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டார். அப்போது தி.மு.க மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, மேயர் ரங்கநாயகி, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

3 24

செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வரும் ஒவ்வொரு பகுதியாக சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2 24 scaled

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: செம்மொழி பூங்கா இறுதி கட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடிக்கப்படும்.

5 10

பூங்காவை 25ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பிறகு பூங்காவில் உள்ள மூலிகை தோட்டங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுகிறார். பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடுகிறார்.

6 6

முதலமைச்சர் திறந்து வைத்ததும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படும். டிசம்பர் 1 முதல் அனுமதிக்கலாம். மழை பெய்தாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் பூங்கா திறக்கப்படும். திறப்பு விழாவிற்காக அவசர அவசரமாக பணிகள் நடைபெறவில்லை எனக் கூறினார்.

8