2025ம் ஆண்டின் ஹாக்கி உலகக்கோப்பை ஆடவர் இளையோர் பிரிவு போட்டி சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ளது. இவ்வுலகக் கோப்பை போட்டி குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்களின் பார்வைக்காக  கோப்பை எடுத்து செல்லப்படுகிறது.

அந்த வகையில் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கோப்பை கொண்டுவரப்பட்டது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி இவ்வுலகக்கோப்பையை கல்லூரிக்குள் எடுத்துவந்து சிறப்பித்தார்.

hicas 2 1

கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரியின் செயலர் பிரியா சதிஸ் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். உலகக்கோப்பையினை இந்திய அணி வெல்வதற்காக மாணவர்கள் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், சிலம்பாட்டம் மூலம் வாழ்த்துக்களை இந்திய அணிக்கு தெரிவித்தனர்.