இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (நவம்பர் 19) கோவை வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, பல இடங்கள் சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம், விமானநிலையம் சந்திப்பு, பீளமேடு, சரவணம்பட்டி, லக்ஷ்மி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளும், வி.வி.ஐ.பி. பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட பகுதிகளில் நவம்பர் 19ம் தேதி மாலை 7 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் விமானங்கள் (ட்ரோன்கள்) பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.