குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராவ் மருத்துவமனை, சார்பில் சூப்பர் கிட்ஸ் 2025 போட்டி 6வது முறையாக நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வினாடி வினா போட்டிகளில் 70 அணிகள் பங்கேற்றன. ஓவியப் போட்டிகளில் 240 இளம் ஓவியர்கள் வண்ணங்களை தீட்டி, கற்பனையை வெளிப்படுத்தினர். விதவிதமான. ஆடை அணிவகுப்பு போட்டியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆடை அழகை வெளிப்படுத்தினர்.

rao

குழந்தைகள் தவழ்ந்து செல்லும்  போட்டியில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசுகளும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

குழந்தைகளின் நலனுக்காகவும், வளர்ச்சிக்கு உதவும் நுண்ணூட்ட சத்துக்கள், அதன் நலன் பற்றி மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி, குழந்தைகள் நல ஊட்டச்சத்து மற்றும் பாலூட்டு நல நிபுணர் பேபி ஸ்ரீ ஆகியோர் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

rao 3

பிரசவ எண்டோஸ்கோபி, கருத்தரித்தல் முதல் நிலை மருத்துவர் மற்றும் இணை இயக்குனர் டாக்டர் தாமோதர் ராவ், நிகழ்ச்சிகளை பாராட்டி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சி குழந்தைகளின் திறனை வெளிப்படுத்துவதாக அமைகிறது. மருத்துவ சேவைகளுக்கும் அப்பாற்பட்டு ராவ் மருத்துவமனையின் கடமை, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியில் பங்கேற்பதாக இருக்கும் என்றார்.

விழாவிற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆஷாராவ், இயக்குனர் தீபிகா ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

rao 4