கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் டெக்விஷன் எனும் தலைப்பில் செயற்கை நுண்ணறிவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சட்காம்.ஆர்க் இணை நிறுவனர் நயன் ஜடேஜா, ஷாப்டிமைஸ் முன்னாள் உலகளாவிய தலைவர் அபிஜித் பிடே கலந்து கொண்டனர்.

நயன் ஜடேஜா பேசுகையில்: தரவு மற்றும் படைப்பாற்றலால் இயக்கப்படும் ஏ.ஐ, வேகம், துல்லியம் மற்றும் தகவமைப்புத் திறன் மூலம் தொழில்களை எவ்வாறு மாற்றுகிறது என்பதை  விரிவாகக் கூறினார். ஏ.ஐ மனித நுண்ணறிவை மாற்றாது அது அதை பெருக்கி வருகிறது என்றார்.

அபிஜித் பிடே பேசுகையில்: தொழில்நுட்பத்தின் உண்மையான பலம் ஆட்டோமேஷனில் மட்டுமல்ல, நிஜ உலக சவால்களை எதிர்கொள்வதிலும் உள்ளது. தொழில்நுட்பம் குறியீட்டு இயந்திரங்களைப் பற்றியது அல்ல. இது மனித தேவைகளை டிகோட் செய்வது பற்றியது. நவீன பொறியாளர்கள் வழிமுறைகளுக்கு அப்பால் சிந்திக்கும், செயல்படும்,  ஊக்கமளிக்கும் சிறந்த பொறியாளர்களாக பரிணமிக்க வேண்டும் என்றார்.