கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள, எம் இன் ஹோட்டல்ஸில் கேக் மிக்சிங் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஹோட்டலின் தலைமை செப் ராஜா தலைமை வகித்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மார்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் லீமா ரோஸ் மார்டின் கலந்து கொண்டார்.

கேக் தயாரிக்கும் கலவையுடன் முந்திரி, பாதாம் செதில்கள், பிஸ்டாச்சியோ, அத்திப்பழம், இலவங்கப்பட்டை, கிராம்புகள், பானங்கள், பொன்னிறப்பாகு, தேன் மற்றும் வெண்ணிலா சாரம் ஆகியவை சேர்க்கப்பட்டு 1 டன் கிலோ எடை வரும் வரை கலக்கப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் உள்ளிட்டோர் கலந்தனர்.

நிகழ்வில் ஹோட்டல் பொது மேலாளர் சுசின், செப்கள், ஹோட்டல் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.