டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பாரதி ஹரிசங்கர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

2060 இளங்கலை மாணவர்கள், 595 முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். தாளாளர் மருத்துவர் ராஜலட்சுமி, கல்லூரியின் முதல்வர் அனிதா, பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.