கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரியில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.
அதனால் கடந்த 19ம் தேதியிலிருந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாராங்கற்கள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து ஐந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து துவங்கியது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
