தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பூச்சியியல் துறையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி 27.10.2025 முதல் தொடர்ந்து 26 நாட்கள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் 25 நபர்களுக்கு வணிகரீதியில் தேனீ வளர்ப்புக் குறித்த அனைத்து தொழில்நுட்பங்களும் விளக்கமாக கற்றுத்தரப்படும். இதில் பங்கு பெற 18 – 35 வயதுக்குட்பட்டவர்களாய் இருத்தல் அவசியம். மேலும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவோர் 26 நாட்களும் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற விரும்புவோர் ஆதார் நகல் எடுத்து வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அவர்களைத் தொடர்பு கொண்டு 24.10.2025 தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும்.
தொடர்புக்கு 9363529576: 9486893905: 9176690292: 9894383412.
