கோவை மாவட்டம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதான் மந்திரி தன் தானிய கிருஷி யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 தொடங்கி வைத்தார். இத்திட்டம் விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், பயிர் பன்முகப்படுத்துதல், ஊக்குவித்தல், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் மற்றும் உணவு பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
இந்திய நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நூறு வேளாண்மை அறிவியல் நிலையங்களில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உள்ள விவசாயிகள் புதுடில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களையும் அறிந்து கொண்டனர். நிகழ்வில் விவசாயிகளுக்கு தேவையான இடுப்பொருட்களான விதைகள், நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள், மேம்படுத்தப்பட்ட கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வின் ஒரு பகுதியாக காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேளாண் இறுதி ஆண்டு மாணவர்களும் திட்டத்தின் மூலம் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். காரமடை வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
