தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் அக்டோபர் 9 அன்று காலை 9.45 மணியளவில் கோவை மாவட்டம், கொடிசியாவில் நடைபெறும் உலக புத்தொழில் இயக்க மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.
தொடர்ந்து, காலை 11 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவினாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ நீளத்திற்கு ரூ.1791.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலையினை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
மேலும், கோவை அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில், உயிர் அமைப்பு சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் உறுதி மொழி ஏற்றல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, காலை 12 மணியளவில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126.12 கோடி மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
