உலக இருதய தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி.ஹெச் சூலூர் பல்துறை மருத்துவமனையின் சார்பில் இருதய நல விழிப்புணர்வு வாக்கத்தான் திங்கட்கிழமை நடைபெற்றது. இதனை கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, மருத்துவ இயக்குனர் டாக்டர் முருகன் மற்றும் கே.எம்.சி.ஹெச் சூலூர் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்கத்தான் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

