ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் துல்லியமாக 3டி தொழிநுட்பத்துடன் கூடிய முதுகெலும்பு டிகம்பரஷ்ஷன் யூனிட்டை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின்  நிர்வாக அறங்காவலர் சுந்தர் திறந்து வைத்தார்.

இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.  அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

இந்த புதிய வசதி, சென்சார்கள் மூலம் துல்லியமான ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் கணினி உதவியுடன் கூடிய சாதனம், முதுகெலும்பு வட்டுகள் மற்றும் நரம்புகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. முதுகெலும்பு தசைகள் மற்றும் தசைநார்கள் தளர்த்தப்படுகிறது, முதுகெலும்பு சுழற்சி மற்றும் தொராசி முதுகெலும்பு உட்பட 3 பரிமாண டிகம்பரஷ்ஷன் விசை மூலம் முதுகுவலிக்கு சிகிச்சையளிக்கிறது.

முதுகெலும்பு டிகம்பரஷ்ஷன் சிகிச்சை என்பது கழுத்து, கீழ் முதுகு வலிக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். நாள்பட்ட முதுகுவலி அல்லது முதுகெலும்பு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதுகெலும்பு டிகம்பரஷ்ஷன் சிகிச்சை பல நன்மைகளை வழங்குகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இது பாதிக்கப்பட்ட பகுதிகளை துல்லியமாக குறிவைத்து, முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தைக் குறைத்து, இயற்கையான குணப்படுத்துதலை ஊக்குவிக்கிறது.

அதன் ஊடுருவல் இல்லாத தன்மை அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய பாதிப்புக்களை குறைக்கிறது. இது பல நோயாளிகளுக்கு பாதுகாப்பான மாற்றாக அமைகிறது. இந்த மேம்பட்ட சென்சார் அடிப்படையிலான தொழில்நுட்பம் ஒவ்வொரு நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.