ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் நினைவுநாளை (செப் 11) முன்னிட்டு பாரதிக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியாரின் படைப்பாளுமை, நாட்டுப்பற்று, மனிதநேயம் போன்றவற்றைப் பற்றிக் கல்லூரி மாணவிகள் உரை நிகழ்த்தினர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் சித்ரா, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

