கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனை முகாம் அக்டோபர் முதல் வாரத்தில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் (40 வயதிற்கு மேற்பட்ட பெண் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்) கலந்துகொண்டு இலவச மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
விருப்பமுள்ள பத்திரிகையாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செப்டம்பர் 19 அன்று மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரினை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
