டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் இசை, நடனம், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ணமயமான பூகோலங்கள், ஆடை அலங்காரங்கள, பாரம்பரிய ஓணம் சத்யா ஆகியவை விழாவுக்கு தனிச்சிறப்பை ஏற்படுத்தின. பூகோலம், வஸ்த்ர வர்ணங்கள் மற்றும் ஓணம் சத்யா போட்டிகளில் சிறந்து விளங்கிய அணிகள் பாராட்டப்பட்டன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
