ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆசிரியர் தினவிழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

சென்னை வி.ஐ.டி., பல்கலைக்கழகக் கூடுதல் பதிவாளர் மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, பேசும்போது, கல்லூரிகளில் ஆசிரியர்கள் முன்பெல்லாம் பாடத்திட்டத்தை மாணவர்களுக்குப் போதித்தால் போதும். இன்று மாணவர்களே அதைத் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகி விட்டன. இதனால் ஆசிரியர்கள் அறிவு சார்ந்து தங்களையும், மாணவர்களையும் மேம்படுத்திக் கொண்டிருப்பது அவசியம். கற்றல், கற்பித்தலில் தொடர்ந்து கவனம் செலுத்தி ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் எழுத வேண்டும். தங்களது தகவல் தொடர்பைத் தொடர்ந்து விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் கல்வி, ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றில் முதலிடம் பிடித்த எம்.பி.ஏ., துறை உதவிப் பேராசிரியர்  திவ்யாவுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த கணினி அறிவியல் துறைத்தலைவர் மரிய பிரசில்லாவுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

மூன்றாமிடம் பிடித்த பி.காம். பிரபஷனல் அக்கவுண்டிங் துறைத்தலைவர் சந்தானகிருஷ்ணனுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் துறைகளில் முதலிடம் பிடித்த பன்னாட்டு வணிகவியல் துறைக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த எம்.பி.ஏ., துறைக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த பி.காம்., சி.ஏ. மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.