ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் அப்பம், இலை அடை, பாயாசம் உள்ளிட்ட கேரள பாரம்பரிய உணவுகளுக்கான பிரத்யேக விற்பனை அரங்குகளை மாணவிகள் அமைத்திருந்தனர். கேரள பாரம்பரிய உடையில் கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் வருகை தந்தனர். அத்தப்பூ கோலமிட்டு செண்டை மேளம் இசைக்கு மாணவிகள் திருவாதிரை நடனமாடினர்.
