டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி நிகழ்விற்கு தலைமையேற்றார். செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்விசார் இயக்குநர் மதுரா பழனிசாமி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அத்தப்பூக் கோலப் போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஓணம் விழாவில் கல்லூரியின் முதல்வர் சரவணன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

