தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக, கோவை மக்கள் சேவை மையம் சார்பில், ஹேண்ட்லூம் பேஷன் ஷோ -8வது பதிப்பு (Handloom Fashion Show – Season 8) கொங்குநாடு கலைக் கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் தலைமையேற்றார்.

சிறப்பு விருந்தினராக கொங்குநாடு கலை கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி, ஃபேஷன் தொழில் முனைவோர் சங்கீதா பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

