டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரத்துறை, கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் கைத்தறி அலங்கார ஆடைகளை அணிந்து வந்து அணிவகுப்பு நடத்தினர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2ம் ஆண்டு மாணவர் ப்ரைசன் பொய், முதலாமாண்டு மாணவி வருணதேவி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சரவணன், கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஐடியா மேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அமைப்பின் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.