கொடிசியா வளாகத்தில் நடைபெறும் கோவை புத்தகத் திருவிழாவில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய வெற்றி உங்கள் பக்கம் (வாழ்வியல் மேம்பாட்டு நூல்), இதயத்தின் ஓசை (கவிதை தொகுப்பு) நூல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.
கட்டுரை தொகுப்பின் முதல் பிரதியை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் செயலர் சம்பத்குமார் பெற்றுக் கொண்டார். கவிதை தொகுப்பின் முதல் பிரதியை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தின், இயக்குனர் சித்ரா பெற்றுக்கொண்டார்.
திருப்பூர் முத்தமிழ் சங்கம் தலைவர் செல்வராஜ், கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2025 துணைத் தலைவர் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஏற்புரை வழங்கினார்.
