கோவை கொடிசியாவில் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை தொழில்துறை கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சி 2 பெரிய அரங்குகளில் நடத்தப்பட உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட சிறந்த கண்காட்சியாளர்கள் இடம்பெறுவார்கள்.

கையால் இயக்கப்படும் கருவிகள், மின் கருவிகள், ஃபாஸ்டெனர்கள், அதன் தொடர்புடைய தொழில்துறை சேவைகளில் அதிநவீன முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்படும். ஆகஸ்ட் 1 காலை 10:30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறும்.

சிஐஏ தலைவர் தேவகுமார் நாகராஜன் கூறுகையில்: இளைஞர்கள் தொழில்துறை நடவடிக்கைகளில், குறிப்பாக எம்.எஸ்.எம்.இ தொழில்களில் ஈடுபட வேண்டும். சென்னை போன்ற பெரிய பெருநகரங்களுடன் போட்டியிட கோவைக்கு உதவும் வகையில் ஏஐ, சாட்ஜிபிடி, ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் கருவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில்: சிஐஏ சிறப்பு மையத்தில் நுண் தொழில்களுக்கான 2 நாள் பயிற்சி திட்டத்தை எடுத்துரைத்தார். பிஎஸ்யூக்கள், ரயில்வேக்கான ஃபவுண்டரி, பம்ப் உற்பத்தி மற்றும் வார்ப்பு ஆகியவற்றில் கோவையின் பலங்களை சுட்டிக்காட்டினார்.

மிடாஸ் டச் இன் இயக்குனர் விவேகானந்தன், அரசு மற்றும் தொழில்துறை கண்காட்சிகளின் ஆதரவுடன் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வளர்ச்சியடைய முடியும் எனக் கூறினார்.