எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் நடத்திய மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் சுமார் 2200 பேர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள் கைப்பந்து போட்டியில் குமுதா பள்ளி முதலிடத்தையும், பெண்கள் கைப்பந்து போட்டியில் கிருஷ்ணாம்மாள் பள்ளி முதலிடத்தையும், பெண்கள் எரிபந்து போட்டியில் பிரசன்டேஷன் பள்ளி முதலிடத்தையும், ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் பி.எம் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் முதலிடத்தையும்,
கோ கோ பெண்கள் போட்டியில் எம்.டி.என் பள்ளி முதலிடத்தையும், கபடி பெண்கள் போட்டியில் கலை வாணி மாடல் பள்ளி முதலிடத்தையும், பூப்பந்து பெண்கள் போட்டியில் கிருஷ்ணாம்மாள் பள்ளி முதலிடத்தையும், பூப்பந்து ஆண்கள் போட்டியில் சுகுணா பிப்ஸ் முதலிடத்தையும் பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் செந்தூரப்பாண்டியன், பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், துனை முதல்வர்கள், உடற்கல்வி இயக்குனர் தினகரன், துனை உடற்கல்வி இயக்குனர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.

