பி.எஸ்.ஜி மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை பிரிவில் புதிய சி.டி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், புற்றுநோய் துறை இயக்குநர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
