கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில், கோவில்பாளையம் சர்க்கார் சாமகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம், விளையாட்டு அரங்கம் திறப்பு விழா மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வகத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கலந்துகொண்டு புதிய அரங்கத்தை திறந்து வைத்து பூமி பூஜையிலும் பங்கேற்றார்.

9

இந்தப் பள்ளியில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு “சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் டாப்பர்ஸ் விருதுகள்” வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வித்திறனை அங்கீகரிக்கும் வகையில் பதக்கங்கள், கோப்பைகள், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கோவை தலைமை கல்வி அதிகாரி பாலமுரளி, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் தலைவர் சௌந்தர்ராஜன், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை குழு தலைவர் பாலசுந்தரம், கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் துளசிதரன், யூனியன் தலைவரும், எஸ்.எஸ். குளம் துணைத் தலைவருமான விஜயகுமார், செல்வம் ஏஜென்சிஸ் உரிமையாளர் நந்தகுமார், பள்ளி தலைமையாசிரியர் விமலா, சி.ஆர்.எஸ். குடும்ப உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

7 1