அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்று பெயரில் சுற்றுப் பயணத்தை கோவையில் நேற்று தொடங்கினார். இரண்டாவது நாளான இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் அர்ஜூனர் ஆகியோர் உடன் இருந்தனர். நடைப்பயிற்சியின்போது சாலையோர வியாபாரியிடம் ரூ.100க்கு 20 எலுமிச்சை பழங்களை வாங்கினார். வியாபாரியிடம் பிற உணவுப் பொருட்களின் விலையைக் கேட்டறிந்தார்.