டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் “நமக்கு வேண்டாம்” எனும் தலைப்பில் போதைப் பொருள் இல்லா கோவையை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் சரவணன், முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், யங் இந்தியாவின் உறுப்பினர் சிவசங்கர் மற்றும் சஞ்சீவ் பத்ரி, மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

என்.ஜி.பி கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி பேசுகையில்: நண்பர்களின் தூண்டுதலால் போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகி வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். இப்பழகத்தினால் நரம்பு தளர்ச்சி, மன நல பாதிப்பு, சிந்தனைத்திறன் குறைதல் போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

10 1

இத்தகைய தவறான செயல்கள் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு மிகப் பெரும் தடையாக இருக்கும். மாணவர்கள் நாட்டிற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றார்.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியின் நிறுவனர் அருண் பேசுகையில்: போதைப் பொருளுக்கு அடிமையாவது மிகப் பெரும் குற்றம். போதையில்லா உலகை உருவாக்கிட வேண்டும். நண்பர்கள் குழுவில் யாரேனும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், உடனடியாக யாராவதிடம் கூறி அவர்களைத் திருத்த முயற்சி செய்ய வேண்டும் எனப் பேசினார்.