பி.என்.ஐ (BNI) பிரீமியர் லீக் சீசன் 5க்கான கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டி வருடத்திற்கு ஒருமுறை கோவையிலுள்ள தொழிலதிபர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில், ரிதம் சாப்டர்ஸ் சார்பாக 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணி இடம் பெற உள்ளது. போட்டிகளில் மொத்தம் 28 அணிகள் பங்கு பெறவுள்ளன. கோவையில் உள்ள நான்கு மைதானங்களில் போட்டி நடைபெற உள்ளன.

இந்நிலையில் பி.என்.ஐ ரிதம் சாப்டர்சின் ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது. மாறன் ஸைனேஜ் இயக்குனர் செல்வி விஜய் ஜெர்சியை அறிமுகப்படுத்தினர். அதனை கேப்டன் கார்த்திக் பாலசுப்ரமணியம்  பெற்றுக் கொண்டார். இந்த அணிக்கான பேட், தொப்பியை மஞ்சுளா, வெள்ளியங்கிரி அறிமுகப்படுத்தினார். 2 நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.