பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மண்டலம் 7ன் சார்பில் தலைவர் அன்பரசு மற்றும் செயலாளர் சரவணகுமார் தலைமையில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளான பணி மேம்பாடு, பணி மேம்பாடு நிலுவைத் தொகை, எம்.பில்., பிஎச்டி ஊக்க ஊதியம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் பணி மேம்பாட்டு நிலுவைத் தொகை நடப்பு தேதி வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் பணி மேம்பாட்டு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.