கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 77வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அல்ட்ரா சைக்கிளிஸ்ட், மாரத்தான் வீரர், ஜி.டி. விஷ்ணு ராம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

கல்வி, விளையாட்டு, கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் நிறுவனத்திற்கான பங்களிப்புகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி, கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா, மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.