நேரு சர்வதேச பள்ளியின் 4வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நேரு கல்வி குழுமங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
தலைமை விருந்தினராக திருப்பூர் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி புனிதா அந்தோனியம்மாள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக திரைப்பட நடிகர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் கணேஷ் வெங்கட்ராமன், நடிகையும் தொகுப்பாளினியுமான நிஷா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் பல்வேறு சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் முதல்வர் சிவபிரகாஷ், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

