இந்தியாவில் முதல்முறையாக ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் 48,975 வைர கற்கள் வைத்து பிரம்மாண்டமாக வளையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை 3 கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர வளையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

skt scaled

வைர கற்கள் பதித்த வளையலை 37 நாட்களில் 18 ஊழியர்கள் சேர்ந்து செய்தனர். இதனை 892.170 கிராம் தங்கம் கொண்டும், 48,975 வைர கற்கள் கொண்டும் 214.700 கேரட் என மொத்தம் 935.110 கிராம் எடை கொண்டு செய்துள்ளனர். கிராஸ் கட் சாலை கிளையில் இந்த வைர கற்கள் கொண்ட வளையல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.