ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வனத்துறை கோவை வனப்பிரிவு இணைந்து, ‘மனித-விலங்கு மோதலுக்கான புதுமையான தீர்வுகள்’ என்ற தலைப்பில் 36 மணிநேர ஹேக்கத்தான் நடத்தினர். கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதிஷ் நிகழ்வை தொடக்கி வைத்தார்.
170க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில், 21 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகின. நடுவர்களாக ரூட்ஸ் நிறுவனத்தின் சம்பத்குமார், விஸ்டேன் நிறுவனத்தின் புருஷோத்தமன் செயல்பட்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதலிடம்,சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி அணிகள் இரண்டாம் இடம் பெற்றன. பரிசுகளை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் வழங்கினர். நிகழ்ச்சியில் வனஉதவி காப்பாளர் கிரிஷ் பால்வே, விஞ்ஞானி நவீன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.