கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், இருகூர் மற்றும் சோமனூர் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு, தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. இதில் சுமார் ரூ.9 கோடி மதிப்பில் நடைமேடைகளை உயர்த்துவது, பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தின் மேம்பாட்டிற்காக தெற்கு ரயில்வே ரூ.3.46 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் ஆப்டிகல் ஃபைபர் தகவல் தொடர்பு சாதன அறை கட்டப்படும். இதேபோல், இருகூர் மற்றும் சோமனூர் ரயில் நிலையங்களில் நடைமேடை உயரத்தை அதிகரிக்க ரயில்வே ரூ.6.42 கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்த மூன்று ரயில் நிலையங்களுக்கான டெண்டர் ஒரே தொகுப்பின் கீழ் பிரிக்கப்பட்டு டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. டெண்டர் செவ்வாய்க்கிழமை அன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

விருப்பமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 11ஆம் தேதி, மதியம் 2 மணிக்குள் இ-டெண்டரை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.