கே.ஆர்.புரம் லயன்ஸ் சங்கம், பீளமேடு கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் கன்சல்டன்சி லயன்ஸ் சங்கம் 2025- 2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் மருத்துவ உதவியும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் தலைவர் மனோகரன், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242 சி ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமாரிடம் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக முதலாம் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர், வட்டாரத் தலைவர் சித்ரா நந்தகுமார், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் மாவட்ட ஆளுநருமான டாக்டர் பழனிச்சாமி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் நித்யானந்தம் கலந்து கொண்டார்.
புதிய தலைவர்களாக புஷ்பராஜ், சுந்தர்ராஜன், மனோகரன், செயலாளர்களாக செல்வநாயகம், கதிரவன், முத்துராஜ், ராம்குமார், லட்சுமண குமார், பொருளாளர்களாக சந்திரன், ஜனார்த்தன ரெட்டி, பாலமுருகன் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.
