சிறு குறு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் சப்கான் 2025 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் மே மாதம் 14ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவர் கிருஷ்ணராஜ், சப்கான் 2025 கண்காட்சியின் தலைவர் சஞ்சீவிகுமார் ஆகியோர் பேசினர். இதில் கொடிசியாவில் சப்கான் கண்காட்சி 9வது பதிப்பாக மே 14 தேதி துவங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

கண்காட்சியை பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் வனிதா மோகன் துவக்கி வைக்க உள்ளார். இந்த கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்த மற்றும் பதிவு செய்திடாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தி மற்றும் தொழிலை பொருளாதார வளர்ச்சியில், மேம்படுத்த இக்கண்காட்சி பெரிதும் உதவ உள்ளது.

கண்காட்சியில் 15 பொதுத்துறை நிறுவனங்கள், 10 பெரும் தனியார் தொழிற்சாலைகள், ஒரு வங்கி, உள்ளிட்ட 225 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.