பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ரோபாடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் துறை சார்பில் ஆட்டோமேஷன், ரோபாடிக்ஸ் மற்றும் சென்சிங் முன்னேற்றங்கள் குறித்த 4வது சர்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறும்.
“ஆட்டோமேஷன் மற்றும் ரோபாடிக்ஸ் துறைகளுக்கான ஜெனரேட்டிவ் மற்றும் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை முதல் நாள் நடைபெற்றது.
தொடர்ந்து, டிசம்பர் 12–13 தேதிகளில் முக்கிய சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் முன்னுரைகள், ஆய்வு கட்டுரை வழங்கல்கள் மற்றும் நிபுணர் உரையாடல்கள் இடம்பெறும்.
ஆட்டோமேஷன் & ரோபாடிக்ஸ் கண்காட்சியில் முன்னணி தொழில்துறைகள் அறிமுகப்படுத்தும் முன்னோடியான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
டிசம்பர் 12ம் தேதி மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை ‘இண்டஸ்ட்ரி கனெக்ட்’ நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு: https://psgtech.edu/icaars2025/index.html
