பி.எஸ்.ஜி. பிசியோதெரபி கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்  எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை வலி மற்றும் பக்கவாதம் மறுவாழ்வு மையத்தின்(PSRC)இயக்குநர் ரவி ரங்கநாதன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் தனது உரையில், பிசியோதெரபி துறையில் நடந்து வரும் மாற்றங்களை எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்களுடைய நடைமுறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, திறன்களை மேம்படுத்தி, பாரம்பரிய மருத்துவ மற்றும் கல்வி கற்பதுடன்  புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவதன் மூலம் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.

27 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம்137 இளங்கலை மற்றும் 61 முதுகலை மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றனர்.

முன்னதாக, பி.எஸ்.ஜி. பிசியோதெரபி கல்லூரி முதல்வர் மகேஷ் வரவேற்பு வழங்கினார். கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.