கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘விருட்சம் 2026’ என்ற பெயரில், 17வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி தலைமை தாங்கினார்.

தலைமை விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் கல்வி கூட்டாண்மை பிரிவு (தமிழ்நாடு & புதுச்சேரி) பிராந்தியத் தலைவர் ரவிகுமார் மூர்த்தி, சிறப்பு விருந்தினராக ஓ மை காட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஹாப்பி மஸ்காட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மைக் முரளி பங்கேற்றனர்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாஸ்காம் நிறுவன இயக்குநர் உதயசங்கர், கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.