நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13 பேராசிரியர்கள், ஒரே நாளில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றனர்.

ராஷித் கஸ்ஸாலி, டென்சி, ஜிதின் ஸ்கேரியா, ரோஷ்மா, லீமா தோமஸ், சிஜினா, ஸ்ரீனா, ரஞ்சினி, இலக்கியா, முத்துகுமார், அனுமோல், அர்ச்சனா, மைக்கேல் ராஜ் ஆகியோர் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.,யிடமிருந்து முனைவர் பட்டம் பெற்றனர். இதில் நிறுவனத்தின் செயலாளரும், நிர்வாக இயக்குநருமான ராஷித் கஸ்ஸாலி, இரண்டாவது பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.