கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் ஜனவரி 2024 அன்று திறக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை 2026 பிப்ரவரி வரை 1.04 இலட்சம் நபர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோரும், போட்டி தேர்வுக்கு தயாராவோரும் இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த தேர்வுகளுக்கு பங்கேற்போர் பயனடையும் வகையில் சுமார் 2080 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

Corp library 2

இந்த நிலையில், இந்த நூலகத்திற்கு கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 35,718 நபர்கள், 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 66,683 மாணவர்கள் மற்றும் ஜனவரி 2026 முதல் பிப்ரவரி வரை 4850 மாணவர்கள் என சுமார் 1.04 இலட்சம் மாணவர்கள் வருகைப் புரிந்து பயன்பெற்றுள்ளனர்.

அதேபோன்று இந்த அறிவுசார் மையத்தில், குரூப் 2 தேர்வில் 6 மாணவர்களும், குரூப் 4 தேர்வில் 12 மாணவர்களும், IIT தேர்வில் 2 மாணவர்கள், வங்கித்தேர்வில் 1 மாணவர், NET தேர்வில் 1 மாணவர் வெற்றி பெற்றுள்ளனர் என கோவை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corp library 3